Thursday , September 24 2020
Breaking News

அமெரிக்காவிடம் வாங்கிய அப்பாச்சி ஹெலிகளை, லடாக் எல்லையில் களமிறக்கியது இந்தியா.

அமெரிக்காவிடமிருந்து அண்மையில் வாங்கிய, அப்பாச்சி, மற்றும் சினுாக் ரக
ஹெலிகொப்டர்களை, இந்திய விமானப்படை லடாக் எல்லையில் பாதுகாப்புப் பணியில்
ஈடுபடுத்தியுள்ளது.

அமெரிக்காவின், போயிங் நிறுவனத்திடமிருந்து, வாங்கப்பட்ட, 17 அப்பாச்சி ரக
ஹெலிகொப்டர்களும், 15 சினுாக் ரக ஹெலிகொப்டர்களும், கடந்த ஆண்டு, இந்திய
விமானப்படையில் சேர்க்கப்பட்டன.
அப்பாச்சி ஹெலிகொப்டர்கள், மி.மீ ஹைட்ரா ரொக்கெட் மற்றும் ஸ்டிங்கர்
ஏவுகணைகளை தாங்கிச் சென்று, தாக்கும் திறன் கொண்டது.
அண்மையில் லடாக் எல்லையில், சீன இராணுவத்தின் அத்துமீறிய செயலால் பதற்ற நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, இந்தப்பகுதியில், கண்காணிப்பு பணியில், அப்பாச்சி மற்றும் சினுாக் ரக
ஹெலிகொப்டர்களை, இந்திய விமானப்படை ஈடுபடுத்தியுள்ளது.
அதேவேளை, 2015இல் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, ஐந்து அப்பாச்சி
ஹெலிகொப்டர்களை உடனடியாக வழங்குமாறு, போயிங் நிறுவனத்திடம், இந்திய
விமானப்படை கேட்டுக் கொண்டதையடுத்து, அவற்றை கடந்த மாத இறுதியில், போயிங்
நிறுவனம், இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவையும் எல்லைப் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக இந்திய விமானப்படை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *