Tuesday , September 29 2020
Breaking News

சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது ஆளும் கட்சி.

சிங்கப்பூரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும்கட்சி 83 ஆசனங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

சிங்கப்பூரில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. முககவசம் மற்றும் கையுறைகள் அணிந்தபடி மக்கள் பாதுகாப்பாக வாக்களித்தனர்.
பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான மக்கள் நடவடிக்கை கட்சி அரசாங்கத்தின் பதவிக் காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில், முன்கூட்டியே இந்த தேர்தல் நடத்தப்பட்டிருந்தது.
நேற்றுக் காலை 8:00 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு இரவு 8:00 மணி வரை
நடைபெற்றது.

இதையடுத்து, வாக்குகள் எண்ணும் பணிகள் இடம்பெற்றன.
இதன்போது, 93 உறுப்பினர்களைக் கொண்ட சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் 83
ஆசனங்களைக் கைப்பற்றி ஆளும் மக்கள் நடவடிக்கைக் கட்சி பெரும் வெற்றியைப்
பெற்றுள்ளது.
எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 10 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதாக பிந்திக்
கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *