Monday , September 28 2020
Breaking News

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 318 ஓட்டங்களைக் குவித்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதல் இன்னிங்சில் 318 ஓட்டங்கள் குவித்து முன்னிலை பெற்றுள்ளது.
இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட்,
சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி, முதல் இன்னிங்சில் 204 ஓட்டங்களைப்
பெற்றிருந்தது.

இதன் பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்சை நேற்று முன்தினம் ஆடத்
தொடங்கியது. 2-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கட் இழப்பிற்கு 57 ஓட்டங்களை,
மேற்கிந்தியத் தீவுகள் அணி எடுத்திருந்தது.
நேற்று 3-வது நாள் பிராத்வைட், ஷாய் ஹோப் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர்.
ஹோப் 16 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ப்ரூக்ஸ் 39
ஓட்டங்களும், ராஸ்டன் சேஸ் 47 ஓட்டங்களும், பிளாக்வுட் 12 ஓட்டங்களும் எடுத்தனர்.

பிராத்வைட் சிறப்பாக விளையாடி 65 ஓட்டங்கள் சேர்த்தார். விக்கெட் கீப்பர் டவ்ரிச் 61
ஓட்டங்கள் விளாசினார்.
கடைநிலை வீரர்கள் ஏமாற்றம் அளித்தாலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 102 ஓவர்களில் 318 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டும், ஆண்டர்சன் 3 விக்கெட்டும்
வீழ்த்தினர்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 114 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ள
நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் ஆட்டத்தை தொடங்கியது.
3 ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 10 ஓவர்களில், விக்கெட் இழப்பின்றி 15
ஓட்டங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *