Wednesday , September 30 2020
Breaking News

நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று – ஹிந்தி திரையுலகம் அதிர்ச்சி.

இந்தியாவில், ஹிந்தி திரையுலகத்தின் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
பெற்று வருகின்றனர்.
இது குறித்து அமிதாப் பச்சன் தனது டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.

“கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானதை தொடர்ந்து மும்பை நானாவதி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.
என்னுடன் கடந்த 10 நாளில் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் சோதனை செய்து
கொள்ள அறிவுறுத்தியுள்ளேன் என்றும் அவர், அந்த டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அதேவுளை, அமிதாப் பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதையடுத்து அவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனக்கும், தனது தந்தைக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோம். என்றும், தங்களுடன் 10 நாட்கள் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்யுமாறும் அவர், டுவிட்டர் செய்தி ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா மேசமாக பரவி வரும் நிலையில், ஹிந்தி திரையுலக உச்ச நட்சத்திரமான அபிதாப் பச்சனுக்கும் அவரது மகனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *