Wednesday , September 30 2020
Breaking News

சவுத்தாம்டன் டெஸ்டில் வெற்றியைத் தொடும் நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான சவுத்தாம்ப்டன் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 170 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர்களான ஜேசன் ஹோல்டர், கேப்ரியல் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சினால், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 204 ஓட்டங்களில் ஆட்டமிழந்த். தொடர்ந்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 318 ஓட்டங்கள் குவித்திருந்தது.

இந்த நிலையில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடி வருகிறது.
போட்டியின் நான்காவது நாளான நேற்று அந்த அணியின் ரொரி பர்ன்ஸ் 42 ஓட்டங்களும், சிப்லி அரை சதமும், கிராலே 76 ஓட்டங்களும், பென் ஸ்டோக்ஸ் 46 ஓட்டங்களும் எடுத்தனர்.
நேற்று ஆட்டத்தின் இறுதியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 284 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து, இங்கிலாந்து அணி, மேற்கிந்திய தீவுகள் அணியை விட 170 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இரண்டாவது இன்னிங்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சார்பில் கேப்ரியல் 3 விக்கெட்டும், சேஸ், ஜோசப் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.
இன்று இறுதி நாள் ஆட்டம் நடக்கவுள்ள நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெறும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *