Monday , September 28 2020
Breaking News

ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் 35 பேர் பலி…….

சிரியாவின் கிழக்குப் பகுதியில் நேற்று நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் 35 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன.
இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள சர்வதேச ஊடகங்கள் சிரியாவின் கிழக்குப் பகுதியில் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மீது விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் இதில், இரண்டு மூத்த தளபதிகள் உள்ளிட்ட 35 பேர் பலியாகினர் என்றும் குறிப்பிட்டுள்ளன.

இந்த விமானத் தாக்குதலை யார் நடத்தியது என்று இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
சிரிய விமானப்படை, ரஷ்ய விமானப்படை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளும் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருவதால், இந்த தாக்குதலை நடத்தியது யார் என்ற குழப்பம ஏற்பட்டுள்ளது.

சிரிய அரச படைகள் மற்றும் ரஷ்யப் படைகள் போர்க்குற்றங்கள் புரிந்துள்ளன என்று ஐக்கிய நாடுகளின் விசாரணை அறிக்கையில் கடந்த வாரம் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், மீண்டும் சிரியாவில் இந்த விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *