Monday , September 28 2020
Breaking News

தென்னாபிரிக்காவில் தேவாலயம் ஒன்றில் தாக்குதல்………

தென்னாபிரிக்காவில் தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
தென்னாபிரிக்காவின் தலைநகரால் ஜொஹனஸ்பேர்க்கில் உள்ள தேவாலயம் ஒன்றின் தலைமை தொடர்பாக எழுந்த பிரச்சினைகளை அடுத்து, சுமார் 40 பேர் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்தனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.

பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தவர்கள் மீது, நேற்றுக்காலை குறித்த தேவாலயத்தில் இருந்து பிரிந்து சென்றவர்களைக் கொண்ட ஒரு குழுவினர் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன் போதே, 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து பெருமளவு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *