Wednesday , September 30 2020
Breaking News

ராஜஸ்தானில் முதல்வருக்கு எதிராக துணை முதல்வர் போர்க்கொடி – காங்கிரஸ் ஆட்சி கவிழும் ஆபத்து.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் அசோக்
கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள துணை முதல்வர் சச்சின் பைலட்,
பாரதீய ஜனதா கட்சி பக்கம் தாவ்வுள்ளார் என்று செய்திகள்
வெளியாகியுள்ளனர்.
துணை முதல்வர் சச்சின் பைலட் தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்,ஏ,க்களுடன்
தற்போது டில்லியில் தங்கியுள்ளார்.

இவர் பைலட் பாரதீய ஜனதா கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ள நிலையில், அவரை சமாதானப்படுத்துவதற்காக காங்கிரஸ்
கட்சியின் மேலிட தூதுவர்களான அஜய் மகேன், ஓட்டங்தீப் சுர்ஜேவாலா ஆகியோர்
அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சச்சின் பைலட் நேற்று இரவு 12) வெளியிட்டுள்ள அறிக்கையில்
தனக்கு, 30 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் அரசு, பெரும்பான்மையிழந்து விட்டது
என்றும், கூறியுள்ள அவர், ஜெய்ப்பூரில் உள்ள தன் வீட்டில், முதல்வர் இன்று
கூட்டியள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் தானும், தனது ஆதரவு
எம்.எல்.ஏ.,க்களும், பங்கேற்க மாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க, தனக்கு இன்னும் அனுமதி
கிடைக்கவில்லை என்றும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *