Saturday , September 26 2020
Breaking News

தெலங்கானா மாநில ஆளுநர் மாளிகையில் கொரோனா.

இந்தியாவின் தெலங்கானா மாநில ஆளுநர் மாளிகையில் கொரோனா
தொற்று தீவிரமாகப் பரவியுள்ள போதிலும், ஆளுநர் தமிழிசை
சவுந்தரராஜனுக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனையில்
தெரியவந்துள்ளது.

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் 10 ஊழியர்கள் மற்றும், அவர்களின் குடும்ப
உறுப்பினர்கள் 10 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதியாகி உள்ளது.
அவர்கள் அனைவரும் ஐதராபாத் எஸ்.ஆர்.நகரில் உள்ள அரசு ஆயுர்வேத
மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, மாநில ஆளுநர் மருத்துவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் கொரோனா
பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்தச் சோதனையில் அவருக்கு தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
தான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாகவும். தொற்று இல்லை என முடிவு
வந்துள்ளது எனவும், தமிழிசை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *