Saturday , September 26 2020
Breaking News

அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் தீப்பற்று.

அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் ஒன்றில் வெடிவிபத்து ஏற்பட்டதை அடுத்து,பற்றி எரிந்து கொண்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சண்டியாகோ கடற்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த USS Bonhomme Richard  என்ற அமெரிக்கப் போர்க்கப்பலிலேயே வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கப்பலுக்குள் தீபரவியுள்ளது. இதனால், கப்பலுக்கு வெளியே பெரும் புகை வந்து கொண்டிருக்கிறது.

இந்த தீவிபத்தில் 11 கடற்படையினரும், தீயணைப்பு பணியில் ஈடுபட்ட 4 பேருமாக 21 பேர் காயமடைந்துள்ளனர் என்று அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படைத் தளத்தில் பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போ இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அருகில் நிறுத்தப்பட்டிருந்த வேறு இரண்டு போர்க்கப்பல்கள் பாதுகாப்பாக நகர்த்தப்பட்டுள்ளன.

1000 பேர் பணியாற்றும் USS Bonhomme Richard   போர்க்கப்பல் ஈரூடக தாக்குதலுக்காக வடிவமைக்கப்பட்டது என்றும் தீவிபத்து ஏற்பட்ட போது அதில் 160 கடற்படையினரே இருந்தனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

கப்பலில் பரவியுள்ள தீயைக் கட்டுப்படுத்த அமெரிக்க கடற்படையினருடன் பல்வேறு தரப்புகளும் இணைந்து போராடி வருகின்றன.

எனினும் தீயை முற்றாக அணைப்பதற்கு சில நாட்கள் செல்லும் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *