Monday , September 28 2020
Breaking News

உக்ரைன் பயணிகளின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் உக்ரைன் பயணிகள் விமானம்  ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு, தமது வான் பாதுகாப்பு பிரிவின் ரேடார் வடிவமைப்பில் ஏற்பட்ட தவறே காரணம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 8ம் திகதி உக்ரைன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் 176 பயணிகளுடன் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து, உக்ரைன் தலைநகர் கீவ்வை நோக்கி புறப்பட்டது.

சில நிமிடங்களிலேயே அந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது, இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 176 பேரும் உயிரிழந்தனர்.

ஈரானின் புரட்சிகர ராணுவ படைக்கு சொந்தமான முக்கிய தளத்தை ஒட்டி உக்ரைன் விமானம் பறந்தபோது, மனித தவறினால் அதை சுட்டு வீழ்த்தி விட்டதாக ஈரான் ராணுவம் அப்போது ஒப்புக்கொண்டிருந்தது.

ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி அமெரிக்காவின்  ஆளில்லா விமானத் தாக்குதலில்  கொல்லப்பட்டதற்குப்  பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்திபதற்றமான சூழலில் தான், உக்ரைன் பயணிகள் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஈரானிய விமான போக்குவரத்து கழகம் விசாரணை நடத்தி உண்மை அறிக்கை என ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. எனினும் இது இறுதி விசாரணை அறிக்கை இல்லை என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் ரேடாரை ஒழுங்குப்படுத்தும் நடைமுறையின் போது மனித  தவறு காரணமாக தோல்வி ஏற்பட்டது, இது ரேடார் அமைப்பில் 107 டிகிரி பிழை ஏற்படுத்தியது என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் விமான பாதையை கண்காணிக்கும் ரேடார் அதனை இயக்கியவருக்கு  தவறா அடையாளம் காட்டியது என்றும்  இதையடுத்தே இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்ட என்றும் ஈரானிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாவது ஏவுகணை  பாதுகாப்பு பிரிவு இயக்குனரால்,  சுடப்பட்டது என்றும்,  அவர் ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து எந்த பதிலும் கிடைக்காத போதும் இதனை செய்தார் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

30 செக்கன்கள் கழித்து இரண்டாவது ஏவுகணை ஏவப்பட்டதில்,  விமானம் விழுந்து நொறுங்கியது என்றும்  அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *