Tuesday , September 29 2020
Breaking News

அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

சீனாவின் வுகான் நகரில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. 

தற்போது கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. 

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 66,528 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது  உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 66,528 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இந்தக் காலப்பகுதியில்  760 பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனாவால் இதுவரை 1,34,729 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் 32,42,073 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்என்றும், ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த ஐந்து நாட்களாக, தினமும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *