Saturday , September 26 2020
Breaking News

சவுதாம்டன் டெஸ்டில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது மேந்திந்திய தீவுகள் அணி.

சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி, இங்கிலாந்தை  4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது.

இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 204 ஓட்டங்களை எடுத்திருந்தது.  தொடர்ந்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதல் இன்னிங்சில் 318 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது.

இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி  நிதானமாக ஆடி 313  ஓட்டங்களைக் குவித்தது.

அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ராய் 42 ஓட்டங்களையும், சிப்லி 50 ஓட்டங்களையும், சக் 76 ஓட்டங்களையும் எடுத்திருந்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தரப்பில் அதிகபட்சமாக கேப்ரியல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த போது, மேற்கிந்தியத் தீவுகள் அணியை விட 199 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இதையடுத்து, 200 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்தியத் தீவுகள் அணி  இரண்டாவது இன்னிங்சை  நேற்று ஆடத் தொடங்கியது.

தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது,

ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுகளை இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 27 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தது.

பின்னர், ரோஸ்டனுடன் ஜோடி சேர்ந்த பிளாக்வுட் அணியின் ஓட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்தினார். ரோஸ்டன் 37 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

நிலைத்து நின்று ஆடிய பிளாக்வுட் 154 பந்துகளில் 12 பவுண்டரிகள் உள்பட 95 ஓட்டங்களை விளாசினார்.

இறுதியில், 6 விக்கெட்டுகளை இழந்து மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி இலக்கான 200 ஓட்டங்களை எட்டியது.

இதன் மூலம் இங்கிலாந்து அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அபார வெற்றி பெற்றது.

137 ஓட்டங்கள் கொடுத்து மொத்தம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் பந்து வீச்சாளர் கேப்ரியல் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முன்னிலை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *