Monday , September 28 2020
Breaking News

கொரோனா அச்சுறுத்தலை அடுத்து யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் முடக்கப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தலை அடுத்து, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின்,
கிளிநொச்சி வளாகம் நேற்று முன்தினம் இரவு முற்றாக
முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கிளிநொச்சி வளாகத்தில் உள்ள, தொழில்நுட்ப பீடத்தில் கல்வி கற்கும்,
மாணவியின் சகோதரனான, கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் பணியாற்றும்,

இராணுவ அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கம்பகாவில் உள்ள சுகாதாரத் திணைக்களத்திலிருந்து
கிளிநொச்சி பிராந்திய சுகாதாரத் திணைக்களத்துக்கு தகவல்
அனுப்பப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கிளிநொச்சி வளாகத்தில் இருந்து வெளியேறுவதற்கும்,
வளாகத்தினுள் செல்வதற்கும் நேற்று முன்தினம் மாலை தொடக்கம் தடை
விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிளிநொச்சி வளாகத்தில் நடைபெற்று வந்த பரீட்சைகள் உட்பட
அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்றும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *