Monday , September 28 2020
Breaking News

இரண்டாவது அலையை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவசர கோரிக்கை.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து பரவத் தொடங்கியுள்ள
கொரோனா இரண்டாவது அலையை தோற்றுவிப்பதை தடுப்பதற்கு உரிய
நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவசர
கோரிக்கையை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில்
ஜாசிங்கவுக்கு, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர்
மருத்துவர் சேனல் பெர்னான்டோ அவசர கடிதம் ஒன்றை அனுப்பி
வைத்துள்ளார்.

அதில் ஏனைய பகுதிகளுக்கு வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக, தொற்றுள்ள
பகுதிகளை தனிமைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொரொனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை
கண்டறிவதற்கு இராணுவப் புலனாய்வுப்பிரிவு மற்றும் சுகாதார வைத்திய

அதிகாரிகள் வலையமைப்பை பயன்படுத்துமாறும் ஆலோசனை
கூறப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடுகள் கூட
இரண்டாவது அலைக்கு விதிவிலக்காக இருக்கவில்லை என்பதையுயும்,
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, பிசிஆர் சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்றும் அரசாங்க
மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் சேனல்
பெர்னான்டோ தமது கடிதத்தில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *