Tuesday , September 29 2020
Breaking News

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளாகிய 29 பேர் நேற்று அடையாளம்
காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.இதையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின்
எண்ணிக்கை 2,646 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்களில் 11 பேர் செனபுர புனர்வாழ்வு
முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் என்று சுகாதார அமைச்சு
தெரிவித்துள்ளது.தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள மேலும் 14 பேர் கந்தகாடு புனர்வாழ்வு
நிலையத்தில் இருப்பவர்கள் என்றும், இரண்டு பேர் ராஜாங்கனையை
சேர்ந்தவர்கள் என்றும், தகவல்கள் கூறுகின்றன.

ஏனைய இருவர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் எனவும்
கூறப்படுகிறது.

இதற்கிடையே கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து
தொற்றுக்குள்ளாகியிருப்பதாக கடந்த சில நாட்களில் அடையாளம்
காணப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 506 ஆக அதிகரித்துள்ளதாக
இராணுவத் தளபதி லெப்டின்னட் ஜெனரல் சவேந்திர சில்வா
தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *