Wednesday , September 30 2020
Breaking News

கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக வெளியாகும் செய்திகள் தவறானவை.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக வெளியாகும்
செய்திகள் தவறானவை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர்
நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க, அடையாளப்படுத்தப்பட்டுள்ள
இடங்களுக்கு அப்பால் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக வெளியாகும்
செய்திகளில் உண்மையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

கந்தகாடு, ராஜாங்கனை, வெலிக்கந்த போன்ற வரையறுக்கப்பட்ட சில
பிரதேசங்களுக்குள் தான் தொற்று இருப்பதாகவும், மருத்துவர் அனில்
ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த இடங்களில் இருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு தொற்று
பரவவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
“நாட்டின் பிற பகுதிகளிலும் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக
வெளியாகும் செய்திகள் தவறானவை, அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டால்
பொதுமக்களுக்கு தெரியவரும்.

பிசிஆர் சோதனையின் மூலம் மட்டுமே, தொற்றாளர்கள் உறுதி
செய்யப்படுவார்கள்.
இதுவரையில் கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் 492 பேருக்கு தொற்று
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 429 பேர் புனர்வாழ்வுக்காக தடுத்து
வைக்கப்பட்டிருப்பவர்களாவர்.

மேலும் 47 பேர் புனர்வாழ்வு முகாமில் பணியாற்றுபவர்கள், ஏனைய 16
பேரும் இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள் என்றும்
மருத்துவர் அனில் ஜாசிங்க மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *