Wednesday , September 30 2020
Breaking News

நாளையுடன் ஓய்வுபெறுகிறார் கடற்படைத் தளபதி – அட்மிரலாக பதவி உயர்வு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அட்மிரலாக பதவி
உயர்த்தப்பட்டுள்ளார்.

நாளையுடன் ஓய்வுபெறவுள்ள கடற்படைத் தளபதிக்கு, ஜனாதிபதி
கோட்டாபய ராஜபக்ச இந்தப் பதவி உயர்வை வழங்கியுள்ளார் என்று
கடற்படைப் பேச்சாளர் லெப்டின்ன்ட் கொமாண்டர் இசுரு சூரியபண்டார
தெரிவித்துள்ளார்.

இன்று தொடக்கம் கடற்படைத் தளபதி அட்மிரலாக பதவி
உயர்த்தப்பட்டுள்ளார் என்றும், நாளையுடன் அவர் சேவையில் இருந்து ஓய்வு
பெறவுள்ளார் என்றும் கடற்படைப் பேச்சாளர் கூறினார்.

இந்த நிலையில், கடற்படைத் தளபதி அட்மிரல் பியால் டி சில்வா நேற்று
பிரதமர் மகிந்த ராஜபக்சவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
இதன் போது, அவரது எதிர்காலம் அமைதியானதாக அமைவதற்கு பிரதமர்
மகிந்த ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாளையுடன் ஓய்வுபெறும் கடற்படைத் தளபதி அட்மிரல் பியால் டி சில்வா
இலங்கை கடற்படையின் 23 ஆவது தளபதி ஆவார்.
இவருக்குப் பதிலாக, புதிய கடற்படைத் தளபதியை ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்ச இன்று அல்லது நாளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *