Tuesday , September 29 2020
Breaking News

யாழ் போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனை.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிசிஆர்
பரிசோதனையில் நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக
யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி
தெரிவித்துள்ளார்.

நேற்று 125 பேருக்கான பரிசோதனைகள் யாழ். போதனா
வைத்தியசாலையிலும், யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வு
கூடத்திலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில், முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு
படையினர் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட பரிசோதனையில் பம்பைமடு
தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த இருவருக்கும் கொரோனா தொற்று
உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *