Tuesday , September 29 2020
Breaking News

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைகிறது – ஏனைய மாவட்டங்களில் அதிகரிப்பு.

தமிழகத்தில், தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ள
நிலையில் ஏனைய மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற போதும், சென்னையில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
நேற்று 10வது நாளாக 2 ஆயிரத்திற்கு குறைவான பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று 1,140 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால், சென்னையில்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,573 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இதுவரை 1,277 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் கொரானா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
சென்னையை அடுத்து, மதுரையில், இதுவரை இல்லாத அளவாக 464 பேருக்கு நேற்று
கொரோனா உறுதியாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதனால், இங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,539 ஆக அதிகரித்துள்ளது.
திருவள்ளூரில் 337 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 352 பேருக்கும், செங்கல்பட்டில் 219 பேருக்கும், கன்னியாகுமரியில் 184 பேருக்கும், விழுப்புரத்தில் 136 பேருக்கும், தேனியில் 134 பேருக்கும், வேலூரில் 129 பேருக்கும், ராணிப்பேட்டையில் 126 பேருக்கும், திருநெல்வேலியில் 113 பேருக்கும், தூத்துக்குடியில் 122 பேருக்கும் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *