Thursday , September 24 2020
Breaking News

3,000 மருத்துவ பணியாளர்கள் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

உலகளவில் இதுவரை 3,000 மருத்துவ பணியாளர்கள் கொரோனா தொற்றுக்கு
பலியாகியுள்ளனர் என்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இது குறைந்த பட்ச எண்ணிக்கை மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ள, சர்வதேச
மன்னிப்புச் சபை பல நாடுகள் மருத்துவ பணியாளர்களின் இறப்பு எண்ணிக்கையை
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் அந்த நாடுகளும் அறிவித்தால்,
பலியானோர் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

தங்களிடம் பதிவான விபரங்களின் அடிப்படையில் ரஷ்யாவில் அதிகபட்சமாக 545 பேரும், பிரிட்டனில் 540 பேரும், அமெரிக்காவில் 507 பேரும் பலியாகி உள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.

இது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆய்வாளர் சன்ஹிதா அம்பாஸ்ட்
கூறுகையில், உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் ஒவ்வொரு நாடும் தங்களது மருத்துவ பணியாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

சில நாடுகளில் தங்கள் பாதுகாப்பை வலியுறுத்தி போராடும் மருத்துவ பணியாளர்கள்
தண்டிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்றும், இது கவலை அளிக்கிறது
என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாங்கள் நடத்திய ஆய்வில் 63க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதுகாப்பு கவசங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *