Thursday , September 24 2020
Breaking News

ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் டுடா வெற்றி.

போலந்து நாட்டில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஆண்ட்ரெஸ்
டுடா வெற்றி பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் ஆதரவாளரான ஆண்ட்ரெஸ் டுடா 51.21 சதவீத வாக்குகள்
பெற்றுள்ளார்.

இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வார்சோ நகர மேயரான ரவால்
டிராஸ்கோவ்ஸ்கியை, 2 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

இந்த தேர்தலில் அதே நேரம் 49 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள ரவால்
டிராஸ்கோவ்ஸ்கி பலம் வாய்ந்த எதிர்கட்சி தலைவராக விளங்குவார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

போலந்தில் கொரோனா பரவி வரும் நிலையிலும் வாக்காளர்கள் அதிகளவில்
வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *