Monday , September 28 2020
Breaking News

நேபாளப் பிரதமர் ஷர்மா ஒலி, இந்தியாவுக்கு எதிராக கருத்து.

அயோத்தி நேபாளத்தில் தான் உள்ளது, ராமபிரான் ஒரு நேபாளி என்று நேபாள பிரதமர்
கே.பி. ஷர்மா ஒலி தெரிவித்துள்ளார்.

நேபாளப் பிரதமர் ஷர்மா ஒலி அண்மைக்காலமாக இந்தியாவுக்கு எதிரான
கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.
நேபாளத்தில் கொரோனா வைரசை பரப்பியது இந்தியா தான் என்றும், தனது ஆட்சியை
கவிழ்க்க இந்தியா சதி செய்கிறது என்றும் அவர் குற்றச்சாட்டுகளை கூறி வந்தார்.

சில மாதங்களுக்கு முன்னர் அவர் இந்தியாவின் சில பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்டிந்தார்.
அத்துடன், இந்திய தொலைக்காட்சி செய்தி சனல்களை நேபாளத்தில் ஒளிபரப்பவும் அவர் தடை விதித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று நேபாளப் பிரதமர் ஷர்மா ஒலி, உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை. நேபாளத்தில் தான் உள்ளது, ராமபிரான் இந்தியர் அல்ல, அவர் ஒரு நேபாளி என்று கூறியுள்ளார்.

அவரது இந்தக் கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *