Friday , September 25 2020
Breaking News

இரண்டு வார தனிமைப்படுத்தலுக்கு கங்குலி எதிர்ப்பு.

அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள், இரண்டு வார காலத்துக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சரியல்ல என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் சவுரவ் கங்குலி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கங்குலி கூறுகையில்,
“இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய அணி அவுஸ்ரேலியாவுக்கு விளையாட செல்வது உறுதி.
அந்தப் போட்டி முக்கியமான போட்டியாக இருக்கும்.
ஆனால் டிசம்பர் மாதம் நான் பிசிசிஐ தலைவர் பதவியில் இருப்பனோ என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை. தலைவர் பதவியில் இருந்த 7, 8 மாதங்களில் 4 மாதங்களுக்கு மேல் பிசிசிஐ அலுவலகம் செல்லவில்லை.

கொரோனா தொற்று பீதி காரணமாக வீட்டில்தான் இருக்கிறோம். ஏனைய நிர்வாகிகளிடம் காணொலி காட்சி மூலம் தான் பேசுகிறோம். இந்த நிலைமை உடனடியாக மாறாது.
இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியா செல்லும் போது வீரர்கள் 2 வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐசிசியின் புதிய விதி கூறுகிறது.

ஆனால், இரண்டு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என்பது மிகவும் அதிகம். இவ்வளவு நாட்கள் வீரர்கள் விடுதிகளில் அடைந்து கிடந்தால் மன அழுத்தம், ஏமாற்றம் ஏற்படும்.
எனவே வீரர்களை தனிமைப்படுத்தும் காலத்தை குறைக்க வேண்டும்.” என்றும் கங்குலி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *