Tuesday , September 29 2020
Breaking News

இராணுவ அதிகாரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

இந்திய இராணுவத்தில் பணியாற்றுவோர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக
ஊடகங்களை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக இராணுவ
அதிகாரி ஒருவர், புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சீனாவை சேர்ந்த அலைபேசி செயலி நிறுவனங்கள், தங்கள் பயனாளர்கள் குறித்த தகவல்களை, சீன அரசுக்கு அளிப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து,டிக்டாக் உள்ளிட்ட, 59 செயலிகளுக்கு, இந்திய மத்திய அரசு தடை விதித்தது.

அத்துடன், இந்திய இராணுவத்தில் பணியாற்றும் வீரர்களுடன், சமூக ஊடகங்களில் நட்பாக பழகி, எதிரி நாட்டை சேர்ந்தவர்கள், பல தகவல்களை திருடுவதாக, பல்வேறு முறைப்பாடுகள் எழுந்தன.

இதையடுத்து, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட, 89 சமூக ஊடக செயலிகளை பயன்படுத்த, இந்திய இராணுவ வீரர்களுக்கு, அண்மையில் தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, ஜம்மு – காஷ்மீரில் பணியாற்றும், லெப்டினன்ட் கேணல், பி.கே.சவுத்ரி, புதுடில்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *