Thursday , September 24 2020
Breaking News

இந்திய மீனவர்களின் ஊடுருவலைக் கட்டுப்படுத்தும் பணியில் இராணுவத்தினரையும் ஈடுபடுத்த முடிவு.

இந்திய மீனவர்களின் ஊடுருவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில்
இராணுவத்தினரையும் ஈடுபடுத்தியுள்ளதாக இராணுவத் தளபதி
லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வடக்கு- கிழக்கு கடற்பரப்பில், இலங்கை எல்லைக்குள் இந்திய
மீனவர்கள் நுழைகின்ற எல்லா முக்கியமான பாதைகளிலும் பாதுகாப்புப்
படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

சட்டவிரோதமாக நுழைவதை தடுப்பதற்காக கடற்படை மற்றும்
விமானப்படையுடன் இணைந்து இராணுவத்தினரும், பணியில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து
மீனவர்கள் சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைவது மிகவும்
கடினமானது என்றும் இராணுவத் தளபதி மேலும் கூறியுள்ளார்.

இந்திய மீனவர்களின் ஊடுருவல்களாலும், கடத்தல் நடவடிக்கைகளாலும்,
இந்தியாவில் இருந்த கொரோனா தொற்று இலங்கைக்குள் பரவக் கூடிய
ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே,
கடற்படையினருடன் இணைந்து இராணுவத்தினரையும் பாதுகாப்பில்
ஈடுபடுத்தியுள்ளதாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா
தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *