Monday , September 28 2020
Breaking News

புதிய கடற்படைத் தளபதியாக, வைஸ் அட்மிரல் உலுகெத்தென்ன இன்று பதவியேற்கிறார்.

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக, வைஸ் அட்மிரல் டமித்த
நிசாந்த சிறிசோம உலுகெத்தென்ன இன்று பதவியேற்பார் என்று
தகவல்கள் கூறுகின்றன.

கடற்படைத் தளபதி அட்மிரல் பியால் டி சில்வா இன்றுடன்
ஓய்வுபெறவுள்ளார்.
நேற்று அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைச் சந்தித்து பிரியாவிடை
பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் புதிய
கடற்படைத் தளபதி நியமனம் செய்யப்படுவார் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டமித்த நிசாந்த சிறிசோம
உலுகெத்தென்ன நியமிக்கப்படுவார் என்றும், அவர் இன்று பதவியேற்றுக்
கொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைஸ் அட்மிரல் சிறிசோம உலுகெத்தென்ன தற்போது கடற்படையின்
தலைமை அதிகாரியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *