Thursday , September 24 2020
Breaking News

நாடாளுமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு ஒத்திகை.

அவசர நிலைமைகளைச் சமாளிப்பது தொடர்பாக நேற்று நாடாளுமன்ற
வளாகத்தில் விசேட பாதுகாப்பு ஒத்திகை ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
நேற்றுக்காலை இந்த ஒத்திகை இடம்பெற்றுள்ளதாக செய்திகள்
கூறுகின்றன.

இதனை உறுதிப்படுத்தியுள்ள நாடாளுமன்ற படைக்கல செவிதர் நரேந்திர
பெர்னான்டோ, நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக இத்தகைய
ஒத்திகை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற அமர்வுகளின் போது, அனர்த்தங்களை எதிர்கொள்ளுதல்,
பணய மீட்பு, மற்றும் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு ஆகியன குறித்தே
இந்த ஒத்திகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த கட்டுப்பாட்டு அறையில்
இருந்து இந்த ஒத்திகை பாதுகாப்பு உயர் அதிகாரிகளால்
கண்காணிப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இராணுவத்தின் 4 ஆவது கொமாண்டோ படைப்பிரிவின் தலைமையில்
நடத்தப்பட்ட இந்த பாதுகாப்பு ஒத்திகையில், இராணுவம், கடற்படை,
விமானப்படை, பொலிஸ், விசேட அதிரடிப்படை, புலனாய்வுப்“ பிரிவுகள்
என்பன பங்கெடுத்திருந்தன.

நாடாளுமன்றச் செயலாளரின் அனுமதியுடன், பாதுகாப்புச்செயலர் மேஜர்
ஜெனரல் கமல் குணரத்னவின் உத்தரவின் பேரில் இந்த ஒத்திகை
நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *