Tuesday , September 29 2020
Breaking News

ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பிப்பதற்கு தீர்மானம் எடுக்கவில்லை.

ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பிப்பதற்கோ அல்லது விடுமுறைகளை
பிரகடனம் செய்வதற்கோ தீர்மானம் எதையும் எடுக்கவில்லை என்று
அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை
வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்களையும் அவர்களுடன் தொடர்புடையவர்களையும்
கண்டறிந்து கைது செய்வற்காக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது
என்றும், விசேட விடுமுறை அறிவிக்கப்படவுள்ளது என்றும் பொய்யான
செய்திகள் பரப்ப்ப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலேயே இவ்வாறான செய்திகள்
பரப்பப்படுவதாகவும், அந்த அறிக்கையில் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து தொற்று பரவுவதை தடுப்பதற்கு
தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல்
திணைக்கள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *