Monday , September 28 2020
Breaking News

இயக்கச்சியில் குண்டுவெடிப்பு சம்பவம்.

இயக்கச்சியில் நடந்த வெடிவிபத்தில் காயமடைந்து உயிரிழந்த புலிகள்
இயக்க முன்னாள் போராளியே, வேறு மூன்று இடங்களில் நடந்த
குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு பொறுப்பாக இருந்தார் என்று கொழும்பு
ஆங்கில ஊடகத் தகவல் ஒன்று கூறுகிறது.

இயக்கச்சி வெடிப்புச் சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணைகளிலேயே
இது தெரியவந்துள்ளது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

வல்லிபுரம், நெல்லியடி மற்றும் அரியாலை ஆகிய இடங்களிலேயே இவர்
வெடிப்புச் சம்பவங்களை நிகழ்த்தியுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் கடந்த 5ஆம் திகதி வெடிக்க வைக்கத் திட்டமிட்டிருந்த
போதே அந்த குண்டு வெடித்து குறித்த புலிகள் இயக்க முன்னாள்
உறுப்பினர் உயிரிழந்தார் என்றும் அந்தச் செய்தியில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *