Monday , September 28 2020
Breaking News

கொரோனாவின் இரண்டாவது அலை, இலங்கையின் எதிர்காலம் உறுதியற்றதாக மாறியுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலையினால் இலங்கையின் எதிர்காலம்
உறுதியற்றதாக மாறியுள்ளது என்று முன்னாள் பிரதமரும், ஐக்கிய
தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தாவில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர்
இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தற்போதைய நிலையில், இலங்கை கொரோனாவுக்கு முந்திய
பொருளாதார நிலையை எட்டுவதற்கே, 10 ஆண்டுகள் செல்லும் என்று
குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க, கொரோனாவைக் கட்டுப்படுத்தத்
தவறினால் இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள
முடியாது என்றும் கூறினார்.

“உள்நாட்டு பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்கு, கொரோனாவை
கட்டுப்படுத்த வேண்டும்.

ஐரோப்பிய பிராந்தியத்தில் உள்ள பல நாடுகள் இதைக்
கட்டுப்படுத்தியுள்ளன. இலங்கையும் அதைச் செய்ய வேண்டும்.

நோயைக் கட்டுப்படுத்தத் தவறினால் அடுத்தடுத்த ஆண்டுகளில் பெரும்
வீழ்ச்சிகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என்றும் ரணில் விக்ரமசிங்க
எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *