Tuesday , September 29 2020
Breaking News

மொபிரெல் நிறுவனத்தின் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர் என சந்தேகிக்கப்படும் ஒருவர், வந்து சென்றதை
அடுத்து. கொழும்பில் உள்ள மொபிரெல் தொலைத் தொர்பு நிறுவனத்தின்
அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

W.A.D ராமநாயக்க மாவத்தையில் உள்ள மொபிரெல் நிறுவன
அலுவலகமே நேற்று சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலை அடுத்து
மூடப்பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

கொரோனா தொற்றுக்குள்ளானவருடன் தொடர்பில் இருந்த ஒருவரே இந்த
அலுவலகத்துக்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது.

எனினும், மூன்றாவது தொடர்பு வட்டத்தில் உள்ளவரே தமது
அலுவலகத்துக்கு வந்து சென்றதாகவும் தற்காலிகமாக மூடிப்பட்டுள்ள
தமது அலுவலகம், தொற்றுநீக்கத்துக்குப் பின்னர் மீளத் திறக்கப்படும்
என்றும் மொபிரெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *