Tuesday , September 29 2020
Breaking News

சுதந்திரக் கட்சிக்கு தலைமையேற்பாரா பிரதமர் மகிந்த – மறுக்கிறார் நாமல் ராஜபக்ச.

பிரதமர் மகிந்த ராஜபக்ச சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகப் பதவியேற்கப் போவதில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பொதுத் தேர்தலுக்குப் பின்னர் கட்சித் தலைமைப் பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், பொதுத் தேர்தலுக்குப் பின்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை பிரதமர் மகிந்த ராஜபக்ச ஏற்றுக் கொள்வதற்கு வாய்ப்புள்ளதாக, அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.

கட்சியை மறுசீரமைப்பதற்கு மகிந்த ராஜபக்சவே பொருத்தமான தலைவர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இதனை நிராகரித்துள்ள நாமல் ராஜபக்ச, சுதந்திரக் கட்சியின்
தலைமைப் பொறுப்பை மகிந்த ராஜபக்ச ஏற்கமாட்டார் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும அவர் பொதுஜன பெரமுனவின் தலைவராக இருந்து கட்சியை மேலும் பலப்படுத்துவார் என்றும், நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *