Tuesday , September 29 2020
Breaking News

ஜனதா கட்சியின் தலைவர் ரவீந்திரா ரெய்னாவுக்கு கொரோனா.

இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ரவீந்திரா ரெய்னாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த இந்திய மத்திய அமைச்சர் ஜிதேந்திரா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

காஷ்மீரில் கடந்த சில வாரங்களுக்கு முன் பாரதீய ஜனதா கட்சி .பிரமுகர் வாசிம்பாரி உள்ளிட்ட மூன்று பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங், பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலர் ராம் மாதவ் உள்ளிட்ட பாரதீய ஜனதா கட்சியினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வாசிம் பாரி இல்லத்துக்கு சென்றிருந்தனர்.

அவருடன் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ரவீந்திரா ரெய்னாவும் சென்றார். இந்நிலையில் ரவீந்திராவுக்கு நேற்று உடல் பரிசோதனை செய்யப்பட்ட போது, அவருக்கு கொரோனா உறுதியானது.

இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த ஜிதேந்திரா டில்லி திரும்பிய நிலையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *