Thursday , September 24 2020
Breaking News

நேற்று ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா தொற்று- கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது தமிழக அரசு.

தமிழகத்தில் இதுவரை இல்லாதளவாக நேற்று ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா
வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்
வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சென்னையில் கொரோனா பரவல் வேகம் முன்பைவிட சற்று தணிந்துள்ள நிலையில், வெளி மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது.

நேற்று மாலை சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 இலட்சத்து 47 ஆயிரத்து 324ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று 1,076 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 11-வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *