Thursday , September 24 2020
Breaking News

அமெரிக்காவுக்கு உளவுத் தகவல்களை வழங்கியவரை தூக்கிலிட்டது ஈரான்.

அமெரிக்காவின் சிஐஏ புலனாய்வு அமைப்புக்கு இரகசிய தகவல்களை வழங்கினார்
என்று குற்றம்சாட்டப்பட்ட ஈரானியர் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரானுக்கு அமெரிக்காவும் பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக தங்களின் அணு ஆயுத தயாரிப்பை தடுத்து நிறுத்த முயற்சி செய்வதாக அமெரிக்கா மீது ஈரான் பகிரங்க குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது.
ஈரானின் புரட்சிப்படை தளபதியான சுலைமானி ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்தது.
இதற்கிடையில், ஈரானின் ரொக்கட், மற்றும் அணு ஆயுத தயாரிப்பு மற்றும் சுலைமானியின் இருப்பிடம் குறித்த தகவல்களை அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏ-வுக்கு இரகசியமாக தகவல் வழங்கினாரைகள் என்ற குற்றச்சாட்டில் இரண்டு பேரை ஈரான் அரசு கைது செய்தது.

கைது செய்யப்பட்ட இருவரும் பணத்திற்காக அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏ-க்கு ரகசிய தகவல்களை அனுப்பினார்கள் என்பது உறுதியாகியுள்ளதாக ஈரான் நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பையடுத்து முதல் நபராக ரிசா அஸ்ஹரிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
மற்றொரு குற்றவாளியான மஜித்துக்கு கூடிய விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாக ஈரானில் பலருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *