Monday , September 28 2020
Breaking News

பட்லருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படும் என்கிறார் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், துடுப்பாட்ட வீரருமான ஜோஸ் பட்லர் கடந்த 12 டெஸ்ட் இன்னிங்ஸ்களில், அரைசதம் கூட அடிக்காத போதும், அவருக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கான இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவ் சேர்க்கப்படவில்லை.
ஜோஸ் பட்லர் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் சவுத்தாம்ப்டன் டெஸ்டில் இங்கிலாந்து தோல்வியை தழுவியது.

ஜோஸ் பட்லர் முதல் இன்னிங்சில் 35 ஓட்டங்களும், 2-வது இன்னிங்சில் 9 ஓட்டங்களும் அடித்தார்.
கடைசியாக 12 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் பட்லர் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.

மேலும் 42 டெஸ்ட் போட்டிகளில் 31.46 ஓட்டங்கள் என்ற சராசரி நிலையிலேயே உள்ளார்.
எனினும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அணியின் பயிற்சியாளர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *